பட்ஜெட்: சென்னை வேளச்சேரியில் 3 கிமீ தூரத்துக்கு புதிய மேம்பாலம்!
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க வேளச்சேரி - குருநானக் கல்லூரி சாலை பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது சென்னை மாநகராட்சிக்கான சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
'வேளச்சேரி, கிண்டி பகுதியில் உள்ள 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி - குருநானக் கல்லூரி சாலை பகுதியில் 3 கிமீ தூரத்திற்கு ரூ. 310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.
கொருக்குப்பேட்டை பகுதியில் ரயில்வே துறையுடன் இணைந்து ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 70 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கப்படும்.
கொடுங்கையூர் எரிவாயு நிலையத்தில் உயிரி எரிவாயு, திடக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.
தாம்பரம் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மைக்கு ஒரு புதிய ஆலை அமைக்கப்படும்.
ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)
ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் அமைக்கப்படும்' என்றார்
இதையும் படிக்க | பட்ஜெட் தாக்கலின்போது அமளி: அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.