
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூ மாவட்டத்தில் கிராமவாசிகள் தாக்கியதில் 5 வனக்காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பலாமூ மாவட்டத்தின் பன்ஸ்திஹா வனப்பகுதியில் சட்டவிரோதமாக பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று (மார்ச் 22) இரவு அந்த வனப்பகுதியினுள் 16 வனக்காவல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 2 டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அப்போது, அங்கு திரண்டிருந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட கிராமவாசிகள் வனக்காவலர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதையும் படிக்க: தில்லியில் சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொன்ற சகோதரர்கள் கைது
இந்நிலையில், தாக்குதலில் பலத்த காயமடைந்த அதிகாரிகள் மீட்கப்பட்டு மெதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, விசாரணை மேற்கொண்டு வரும் சத்ராப்பூர் காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட கிராமவாசிகளை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.