சசிகலா, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை: இபிஎஸ் உறுதி

அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், தினகரனை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி
Published on
Updated on
1 min read

அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், தினகரனை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தில் அவர் செய்தியாளர்களுடான சந்திப்பில் பேசுகையில்,

2025-26 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் தேர்தலுக்கான அறிவிப்புகள் மட்டுமே. திமுக அரசுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் எதையும் இவர்களால் செயல்படுத்த முடியாத நிலையே உள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் போடப்பட்டு, அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணி செய்யவது என இயலாத காரியம். எனவே அறிவிக்கப்பட்டுள்ள அத்தனை அறிவிப்புகளும் தேர்தலுக்காக, வாக்குகளை பெறுவதற்காக ளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களாகவே பார்க்கப்படும்.

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது என குற்றம்சாட்டியுள்ளார்.

விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு என இப்படி எல்லா வகையிலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நிதிநிலை அறிவிப்பு வெறும் நாடகம்.

நாடாளுமன்ற தொகுதி மறுவரை தொடர்பாக தில்லியில் திமுக உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

இதில் காங்கிரஸ் கலந்து கொண்டிருந்தால் திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி பலன் அளிக்கும் என்று எண்ணலாம். திமுக அரசின் ஊழல்களில் இருந்து மக்களை திசை திருப்பவே தொகுதி மறுவரைக்கு எதிரான கூட்டத்தை நடத்தியுள்ளனர் என கூறினார்.

சசிகலா,ஓபிஎஸ், தினகரனை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை.

மேலும், அதிமுக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், சசிகலா, ஓபிஎஸ், தினகரனை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அது குறித்து முடிவு எடுக்கப்படும்.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். கொள்கை வேறு, கூட்டணி வேறு. கொள்கை எப்பொழுதும் நிலையானது; கூட்டணி தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடியது. அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்தும் வகையில் யூகம் அமைத்து கூட்டணி அமைக்கப்படும்.

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இன்று மட்டுமே அனைவருக்கும் நிச்சயம். நாளை என்பது கேள்விக்குறிதான் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com