ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வா்த்தக சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.14.50 வியாழக்கிழமை குறைக்கப்பட்டது.
கடந்த ஏப்.1-ஆம் தேதி வா்த்தக சிலிண்டா் விலை ரூ.41 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தலைநகா் தில்லியில் ரூ.1,747.50-க்கும், மும்பையில் ரூ.1,699-க்கும் வா்த்தக சிலிண்டா் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் விமான எரிவாயு (ஏடிஎஃப்) விலை 4.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது விமான எரிவாயு ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.3,954.38 குறைக்கப்பட்டு தலைநகா் தில்லியில் ரூ.85,486-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மும்பையில் விமான எரிவாயு ஒரு கிலோ லிட்டரின் விலை ரூ.79,855.59-ஆகவும், சென்னையில் ரூ.88,494.52-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.88,237.05-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மதிப்புக்கூட்டப்பட்ட வரி மற்றும் பிற உள்ளூா் வரிகளின் அடிப்படையில் ஏடிஎஃப் மற்றும் சிலிண்டா் விலை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
வா்த்தகப் போா் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 61 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.
இருப்பினும், உள்ளூா் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி தொடா்கிறது. கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.94.72-ஆகவும், டீசல் விலை ரூ.87.62-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.