பேரவை
பேரவை

பேரவை நுழைவுவாயிலில் திடீரென தீ அலாரம் ஒலி எழுப்பியதால் பரபரப்பு!

பேரவை வளாக நுழைவுவாயில் அருகில் தீ விபத்து முன்னெச்சரிக்கை அலாரம் திடீரென ஒலி எழுப்பியதால் அந்த பகுதியில் பரபரப்பு
Published on

சென்னை: தலைமைச் செயலக பேரவை வளாக நுழைவுவாயில் அருகில் தீயணைப்புத்துறையினரால் பொருத்தப்பட்ட தீ விபத்து முன்னெச்சரிக்கை அலாரம் திடீரென ஒலி எழுப்பியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை நுழைவாயில் அருகே தீயணைப்புத்துறையினரால் பொருத்தப்பட்டு இருந்த தீ விபத்து முன்னெச்சரிக்கை அலாரம் திடீரென ஒலித்ததால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பரிசோதனை செய்ததில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த அலாரம் ஒலித்துள்ளது மற்றபடி எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் தீ விபத்து முன்னெச்சரிக்கை அலாரம் சரிசெய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com