அரசியல் சார்ந்த செலவினங்களை கணிசமாகக் குறைக்கத் திட்டம்: எலான் மஸ்க்

அரசியல் சார்ந்த செலவினங்களுக்கு அளிக்கப்படும் நிதிகளை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக உலகப் பெரும்பணக்கார் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அரசியல் சார்ந்த செலவினங்களுக்கு அளிக்கப்படும் நிதிகளை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக உலகப் பெரும்பணக்காரரும் எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்பிற்கு ஆதரவாக பிரசாரம் மற்றும் ரூ.2,500 கோடிக்கும் மேல் செலவிட்ட மிகப்பெரிய நன்கொடையாளர் எலான் மஸ்க். தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், சிறந்த நிர்வாகத்திற்கான துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக மஸ்க் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில், வெளிநாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம், பணியாளர்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் மஸ்க் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. மஸ்க்குக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது.

இதனிடையே, தேவையற்ற செலவுகளை குறைப்பது, முறைகேடுகளை கண்டறிந்து நிறுத்தியது போன்ற நடவடிக்கைகளால் அமெரிக்கா கடனில் மூழ்குவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எங்களது பணிகளை முடித்துவிட்டதால் மே இறுதியில் துறையின் தனது முழுநேரப் பணியிலிருந்து விலக இருப்பதாக கூறியிருந்த மஸ்க், இப்போது வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாள்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்.

இதையடுத்து சிறந்த நிர்வாகத்திற்கான துறைத் தலைவராக தனது முழுநேரப் பணியிலிருந்து மஸ்க் விலகுவதால், டிரம்புக்கும் மஸ்க்குக்கும் இடையிலான நெருங்கிய உறவில் விரிசல் ஏற்படக்கூடும் என்ற கருத்துகள் எழுந்த நிலையில், அரசியலைப் பொறுத்தவரை, "நான் செய்ய வேண்டியதைச் செய்தேன்" என்று மஸ்க் கூறினார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவளிப்பதால் டெஸ்லா நிறுவன கார் விற்பனையில் பின்னடைவு இருந்தாலும், தனது டெஸ்லா மின்சார கார் நிறுவனம் ஐரோப்பாவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அரசியல் சார்ந்த செலவினங்களை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அரசியல் சார்ந்த செலவினங்களுக்கு அளிக்கப்படும் நிதிகளை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக மஸ்க் கூறியிருப்பது 2026 இல் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே, நிறைய நன்கொடை அளித்துள்ள எலான் மஸ்க், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து நிறுவனத்தை மேலும் வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைககளில் கவனம் செலுத்தப்பபோவதாகவும், அதன்பிறகும் நான்தான் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பேன். அந்த யாருக்கும் விட்டுகொடுக்க மாட்டேன் என்று மஸ்க் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com