"கலைஞரின் பேனா" புத்தகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதிய "கலைஞரின் பேனா” நூல் வெளியீடு பற்றி...
பேராசிரியர் தி. இராசகோபாலன்  எழுதிய "கலைஞரின் பேனா” நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதிய "கலைஞரின் பேனா” நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
Published on
Updated on
1 min read

பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதிய "கலைஞரின் பேனா” நூலினை புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூலாசிரியர் பேராசிரியர் இராசகோபலன், முரசொலி செல்வத்தின் வகுப்புத் தோழர், திராவிடர் மாணவ முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றியவர். அவர் ஆண்டுதோறும் ஆழ்வார்கள் ஆய்வு மையக் கூட்டங்களை சிறப்பாக நடத்துகின்ற பாங்கினை கலைஞர் பாராட்டியுள்ளார்.

கலைஞர் ஆட்சித்திற ஆளுமைகள், இலக்கிய ஆளுமைகள் முதலியவை குறித்து இந்நூலில் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

முத்தமிழறிஞர் கலைஞரை தொண்டால் தொட்டவர்கள் உண்டு; அவரைக் கலையால் தொட்டவர்கள் உண்டு; ஆனால், கலைஞருடைய பேனாவைத் தொட்டு, அவரது நெஞ்சைத் தொட்டவர் நூலாசிரியர். கலைஞருடைய எழுத்துக்கள் எனக்குப் பிராணவாயுவாகிப் போனதால், அவற்றைப் பதிவு பண்ணும் ஒலிப்பதிவு கருவியானேன் என்கிறார் நூலாசிரியர்.

இந்நூலில், கலைஞர் தம் வாழ்நாளில் நேரம் காலம் இல்லாமல் எழுதிக் கொண்டிருந்தார்; அதனால்தான் அவருடைய எழுத்துக்கள் நேரம் காலம் இன்றி வாழ்கின்றன என்றும், பண்டித ஜவாஹர்லால் நேரு, ராபர்ட் ப்ராஸ்ட்டினுடைய கவிதையை எழுதி தம் மேஜை மீது வைத்திருந்தார். ஆனால், கியூபாவின் அதிபர் பெடல் காஸ்ட்ரோ 20.1.2006 இல் கலைஞர் எழுதிக் கொடுத்த கவிதையை ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்த்துத் தம் மேஜையின் மீது வைத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக கவிஞர்களின் எழுத்துக்களோடு முத்தமிழறிஞரின் எழுத்துக்களை ஒப்பிட்டால், மற்றவர்களுடைய எழுத்துக்கள் மலையடிவாரத்தில் நடக்கின்றன. ஆனால், கலைஞரின் எழுத்துக்கள் மலையின் சிகரத்தில் உயர்ந்து நிற்கின்றன என்றும், கலைஞருடைய நாவும் பேனாவும் ஒரே உறையில் கிடக்கும் இரண்டு வாள்கள். கலைஞர் தம்முடைய எழுத்துப் பணியைப் புதுச்சேரியிலிருந்து வெளிவந்த பத்திரிகையில் தொடங்கினார். அந்த முதல் கட்டுரைக்கு "அந்தப் பேனா" எனப் பெயரிட்டிருந்தார். அதனால் இந்த நூலுக்கு "கலைஞரின் பேனா" எனத் தலைப்பிடப்பட்டதாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் மட்டுமன்றி, இந்திய அரசியலையே உச்சி முதல் பாதம் வரை அளந்தது, கலைஞருடைய பேனா என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்துப் பணியை இந்நூல் போற்றிப் புகழ்கிறது.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டப்பேரவை உறுப்பினர் அன்னியூர் சிவா, இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகி சிவம், கற்பகம் புத்தகாலயத்தின் நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com