
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டினை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலர் அண்ணாமலை ரகுபதி, வட்டாட்சியர் எம்.சாந்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 800-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
காளைகள சிறந்த முறையில் அடக்கிய வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் சி.கண்ணன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.