இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கும், “காலத்தின் நிறம் - கருப்பு சிவப்பு” புத்தகத் தலைப்பிலேயே, நம்முடைய இயக்கம் எத்தகைய மாபெரும் அறிவுக் கரூவூலமாக - கொள்கைத் தீரர்களின் கோட்டமாக இருக்கிறது என்று வெளிப்படுத்தியிருக்கிறார்கள்! நம்முடைய 75 ஆண்டுகால வரலாற்றையும் - சாதனைகளையும், 1,120 பக்கங்களில் உதயநிதி உருவாக்க துணை நின்ற, ஆலோசனை வழங்கிய நம்முடைய மதிப்பிற்குரிய சிந்தனைக் கருவூலம் க. திருநாவுக்கரசு, ஊடகவியலாளர்கள் திருமாவேலன், விஜயசங்கர், கோவி.லெனின்… தொகுப்பாசிரியர்கள் செந்தில், சுகுணா திவாகர், நீரை மகேந்திரன், பிரகாஷ், கௌதம்ராஜ், பன்னீர் பெருமாள் என எல்லோருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.