

யோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் வடகிழக்கில் உள்ள இவாட் மற்றும் மியாகி மாகாணத்தின் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.03 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.9 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பூமிக்கடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடலில் 1 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரம் வரை ராட்சத அலைகள் எழக்கூடும் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஷின்கான்சென் புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வேகமாக வெளியேறுமாறும், நிலநடுக்கத்திற்குப் பிறகு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பின்னர் வரக்கூடிய சுனாமி எதிர்பார்ப்பதை விட பெரியளவில் இருக்கலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இவாட் மாகாணத்தின் ஒஃபுனாட்டோ, ஒமினாட்டோ, மியாகோ, கமைஷி, குஜி ஆகிய நகரங்களில் 10 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை சுனாமி அலைகள் எழுந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.