

சிதம்பரம்: சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள நவாப் பள்ளிவாசலில் சனிக்கிழமை முஸ்லிம்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் நவாப் அப்துல் நபிகான் மஸ்ஜித் (GS 62/SA) சுமார் 60 ஆண்டுகளாக ஜமாத்தார்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு வக்ஃப் வாரியம் ஜமாத்தார்களின் ஆலோசனை கேட்காமல் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வக்பு வாரியம் ஏழு பேர் கொண்ட குழுவிற்கு இப்பள்ளியை நிர்வாகம் செய்ய தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்டித்து தற்போது பள்ளிவாசலை நிர்வாகம் செய்து வரும் ஜமாத்தார்கள் சனிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமியர்கள் இரு பிரிவினிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.