

புதுதில்லி: பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
மேலும், நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக பிர்சா முண்டாவை நினைவு கூர்ந்தார் மோடி.
ஜார்க்கண்ட் மாநிலம் உலி ஹாட்டு பகுதியில் பழங்குடியினர் சமூகத்தில் பிறந்த பிர்சா முண்டா, சிறு வயதிலேயே ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார்.
25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், பழங்குடியினரின் நிலம் மற்றும் உரிமைகளைக் காக்கப் போராடினார். இதனால், 'நிலத்தின் தந்தை' எனப் பழங்குடினரால் அவர் அழைக்கப்பட்டார். இவரது பிறந்த நாள் சனிக்கிழமை(நவ.15) கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பழங்குடியினர் பெருமை நாளின் இந்த புனிதமான வேளையில், நாட்டின் சுதந்திரப் போரட்ட வீரர் பிரபு பிர்சா முண்டாவின் பங்களிப்பை ஒட்டுமொத்த தேசமும் மரியாதையுடன் நினைவு கூர்கிறது. ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிரான அவரது போராட்டமும் தியாகமும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து உத்வேகம் மற்றும் ஊக்கமளிக்கும். அவருக்கு நூறு மடங்கு வணக்கங்கள் என மோடி கூறியுள்ளார்.
மேலும், ஜார்க்கண்ட் மாநிலம் உருவான நாளையொட்டி அந்த மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பிரபு பிர்சா முண்டாவின் இந்த நிலத்தின் வரலாறு தைரியம், போராட்டம் மற்றும் சுயமரியாகைகளால் நிரம்பியுள்ளது. இந்த நாளில் மண்ணின் மக்களுக்கு எனது வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
2000 ஆம் ஆண்டு பிர்சா முண்டாவில் பிறந்தநாளையொட்டி பிகார் மாநிலத்தில் இருந்து பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த பிர்சா முண்டா, 1875 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பிறந்தார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேய ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிரான தனது போராட்டத்தை முன்னெடுத்தார்.
அவரது பிறந்தநாள் பிர்சா முண்டா ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.