சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விண்வெளி ஆய்வுத் துறையில் தனியாரை அனுமதிக்கும் முயற்சி ஆபத்தானது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

விண்வெளி ஆய்வுத் துறையில் தனியாரை அனுமதிக்கும் முயற்சி ஆபத்தானது என்பது தொடர்பாக...

News image

மு. வீரபாண்டியன்

X

Updated On :29 நவம்பர் 2025, 8:45 am

இணையதளச் செய்திப் பிரிவு

புதுக்கோட்டை: விண்வெளி ஆய்வுத் துறையில் தனியாரை அனுமதிக்கும் முயற்சி ஆபத்தானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவிகளை அனுப்பியுள்ள இந்திய அரசைப் பாராட்டுகிறோம். இயற்கை பேரிடர்களால் பாதிப்புக்குள்ளாகும் அருகாமையில் உள்ள சிறிய நாடுகளுக்கு உதவி செய்வது நல்ல விஷயம்.

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தனியாரை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. அந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்னைகளின் போதும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அவற்றின் மகளிர் அமைப்பு உள்ளிட்டவை தங்களின் பலத்துக்கேற்ப பல வகையான போராட்டங்களை நடத்தி வருகிறோம். எதனையும் கூட்டணிக்காக நாங்கள் கடந்து போனதில்லை. ஆனால் எங்கள் மீதுதான் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைச் சம்பவங்களில் பிரதானமாக இருக்கும் ஆணாதிக்கச் சிந்தனையை அகற்றுவதற்கான முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. தில்லியில் ஏற்பட்டுள்ள காற்றுமாசு குறித்து பேச வேண்டும். மக்களைக் காப்பாற்ற வேண்டும். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளும் பணி தொடக்க நிலையிலேயே தோல்வியடைந்துள்ளது. தமிழக முதல்வர் கோரியுள்ளபடி அதற்கான காலத்தையாவது தள்ளிப்போட வேண்டும் என்றார் வீரபாண்டியன்.

Summary

Attempt to allow private sector in space exploration is dangerous: Communist Party of India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.