எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலியானது தொடர்பாக...
உயிரிழந்த அதிமுக தொண்டர் கொண்டையம்பாளையம் அர்ஜூணன்(43)
உயிரிழந்த அதிமுக தொண்டர் கொண்டையம்பாளையம் அர்ஜூணன்(43)
Updated on
1 min read

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்து பலியானார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - கோபி நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத் திடலில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க கோபி அருகே கொண்டையம்பாளையம் பகுதியை சோ்ந்த அதிமுக தொண்டர் அா்ஜூனன்(43) என்பவா் சென்றுள்ளாா்.

இந்த நிலையில், பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பாக, அங்கு வந்து காத்திருந்த அதிமுக தொண்டர் அா்ஜூணன் மாலை 5 மணி அளவில் கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகில் முத்து மகால் முன்பு சாலையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா்.

உடனடியாக அதிமுகவினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலே உயிரிழந்தார். இருப்பினும் மருத்துவமனைக்கு கொன்று சென்ற அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக கோபி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Summary

One person faints and dies during Palaniswami's campaign in Edappadi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com