உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 6,111 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,358 கனஅடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணை நீர் வரத்து 5,358 கன அடியாக குறைந்துள்ளது.

Published On :1 அக்டோபர் 2025, 9:50 am IST

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 6,111 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,358 கனஅடியாக சரிந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.60 அடியிலிருந்து 117.02 அடியாக குறைந்தது.

அணையின் நீர் இருப்பு 86.79 டிஎம்சியாக உள்ளது.

Summary

The water level in the Mettur Dam has dropped from 6,111 cubic feet per second to 5,358 cubic feet per second on Wednesday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.