
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் ஆயுத பூஜை உள்பட 3 நாள்கள் விடுமுறையை முன்னிட்டு புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து குடும்பத்தினருடன் மகிழ்ந்தனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மா, பலா, வாழை என முக்கனிகளில் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா்.
இங்குள்ள படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சி, முருகன் கோயில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவா்ந்து வருகின்றன. எனவே, விடுமுறை நாள்களில் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி, பொழுது போக்கி செல்கின்றனா்.
பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்தவாறு சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் உள்ள படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அனைத்து தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பலர் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.