
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவொற்றியூர் நல சங்கம் சார்பில் அங்குள்ள காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்த நாளையொட்டி, திருவொற்றியூர் நல சங்கம் சார்பில் மாநகராட்சி பூங்கா வளாகத்தில் உள்ள சுமார் 70 ஆண்டுகள் பழமையான காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், காந்தியவாதி பாபண்ணா காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் சங்க நிர்வாகிகள் கே. சுப்பிரமணி, எம். மதியழகன், எஸ். பாஸ்கரன், எம். கோதண்டம், வி. இளங்கோ, விஜயலட்சுமி சோலை, காஞ்சனா தேவி, ஆர். சக்தி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.