கடலோர காவல் படைக்கு புதிய ரோந்துக் கப்பல் அர்ப்பணிப்பு!

இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட ரோந்துக் கப்பலை பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் தீப்தி மொஹில் சாவ்லா ....
கடலோர காவல் படைக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய ரோந்துக் கப்பல் அக்சர்.
கடலோர காவல் படைக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய ரோந்துக் கப்பல் அக்சர்.
Published on
Updated on
2 min read

காரைக்கால்: இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட ரோந்துக் கப்பலை பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் தீப்தி மொஹில் சாவ்லா காரைக்கால் துறைமுகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

இந்திய கடலோரக் காவல் படையின் மையம் காரைக்காலில் அமைந்துள்ளது. காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட கடல் பகுதியில் ரோந்து பணியில் கப்பல் மற்றும் ரோந்து படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. காவல் படையை வலுப்படுத்தம் விதமாக புதிதாக கோவா கப்பல் கட்டும் தளத்திலிருந்து ரோந்து கப்பல் தயாரிக்கப்பட்டு சனிக்கிழமை காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு இயக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அக்சர் என்று பெயரிடப்பட்ட புதிய கப்பல் சுமாா் 51 மீட்டர் நீளமும் 320 மெட்ரிக் டன் ஆகும். மணிக்கு 27 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. இதில் ஐந்து அதிகாரிகள் 33 ஊழியர்கள் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரோந்துக் கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டு, நாட்டுக்கு அா்ப்பணிப்பு செய்யும் நிகழ்ச்சி காரைக்கால் தனியார் துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் தீப்தி மொஹில் சாவ்லா கலந்து கொண்டு கப்பலை முறைப்படி நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் தீப்தி மொஹில் சாவ்லா
பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் தீப்தி மொஹில் சாவ்லா

அவர் பேசுகையில், இந்திய கடலோர காவல்படையின் பணிகள் சிறப்பாக அமைந்துள்ளது. இந்திய கடலோர காவல் படையினர் மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் முக்கிய பங்களிக்கிறார்கள். இந்திய கடலோர காவல் படையின் வலிமையை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் படையின் பணிகள் மேலும் சிறப்படைய இந்தக் கப்பல் துணை நிற்கும்.

பாதுகாப்பு அமைச்சகம் அதற்கு தேவையான ஆதரவுகளை வழங்கி வருகிறது. கடலோர காவல் அனைத்து பணியாளர்களும் தேசத்துக்கான நலனில் அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், காவல் படை கிழக்கு பிராந்திய கூடுதல் கமாண்டட் டோனி மைக்கேல் உள்ளிட்ட கடலோர காவல் படை அதிகாரிகள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், காரைக்கால் மாவட்ட முதுநிலை கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Summary

New patrol ship coast guard dedication

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com