
வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் புரட்டாசி நடு சனி சிறப்பு பூஜை விரதம் முடிப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோயிலில் புரட்டாசி நடு சனி சிறப்பு பூஜை வழிபாட்டில், மூலவரான சென்றாயப் பெருமாள் சீதேவி, பூதேவி சமேதமாக, ரத்தினக்கற்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி பிரசாதம் பெற்று பக்தர்கள் விரதம் முடித்தனர். சுவாமி திருக்கல்யாண வைபோவமும் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. வாழை இலை போட்டு சமபந்தி விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
வாழப்பாடி அடுத்த மத்தூர் சீனிவாச பெருமாள் கோயில், வாழப்பாடி புதுப்பாளையம் திருமலை பெருமாள் கோயில், அருநூற்றுமலை பெலாப்பாடி வரதராஜ பெருமாள் கோயில், கோதுமலை கோதண்டராமர் மலைக்கோயில், பேளூர் அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் திருக்கோயில்களிலும் புரட்டாசி நடு சனி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி பிரசாதம் துளசி தீர்த்தம் பெற்று புரட்டாசி மாத விரதம் முடித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.