வந்தே பாரத்
வந்தே பாரத் (கோப்புப்படம்)

கோவில்பட்டியில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல அனுமதி!

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல அனுமதி.
Published on

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் கடந்த 2024 செப்டம்பா் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக 16 பெட்டிகளாக இருந்த ‘வந்தே பாரத்’ ரயில் தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘வந்தே பாரத்’ ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இதுவரை நிற்காமல் சென்று வந்தது. அங்கு நின்று செல்ல அனுமதிக்குமாறு அந்தப் பகுதியினா் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இந்த நிலையில், தற்போது கோவில்பட்டியிலும் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இருமாா்க்கத்திலும் செல்லும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்வதற்கான உத்தரவு முறைப்படி தெற்கு ரயில்வே விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com