
சென்னை: வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.11,300-ஐ கடந்தது. ஒரு பவுன் ரூ.90,400-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. விரைவில் பவுன் ரூ. 1 லட்சத்தை கடக்கும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.90,400-க்கு விற்பனையாகிறது.
சா்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ள காரணத்தால் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.1,400 உயா்ந்து ரூ.89,000-க்கு விற்பனையானது.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.89,600-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 மீண்டும் உயா்ந்துள்ளது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.11,300-க்கும், பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.90,400-க்கும் விற்பனையாகிறது. எனினும், வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,67,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் ஆபரணத் தங்கம் விலை கடந்து வந்த பாதை (ஒரு பவுன் விலை)
ஆண்டு - விலை
1975 - ரூ.432
1980 - ரூ. 1,136
1985 - ரூ. 1,544
1995 - ரூ. 3,600
2000 - ரூ. 3,480
2005 - ரூ. 4,640
2010 - ரூ. 15,448
2015 - ரூ. 18,952
2020 - ரூ. 37,792
2021 - ரூ. 36,152
2022 - ரூ. 41,040
2023 (டிச.31) - ரூ. 47,280
2024 (மாா்ச் 5) - ரூ. 48,120
2025 (அக்.8) - ரூ.90,400
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.