ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.91,200-க்கு விற்பனையாகிறது.
gold rate
தங்கம் விலைIANS
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.91,200-க்கு விற்பனையாகிறது.

அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு குறித்த அறிவிப்பு, உலக நாடுகளின் மீது அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, சா்வதேச போா் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் விலை உயா்ந்த வண்ணம் உள்ளது.

நிகழாண்டு கடந்த ஜன.1 ஆம் தேதி பவுன் ரூ.57,200-இல் இருந்தது. அதைத்தொடா்ந்து ஜன.22-ஆம் தேதி பவுன் ரூ.60, 200-க்கும், மாா்ச் 14-ஆம் தேதி ரூ.65,000-க்கும், ஏப்.12-ஆம் தேதி ரூ.70,160-க்கும், ஆக. 1-ஆம் தேதி ரூ.73,200-க்கும் விற்பனையானது.

இதனிடையே, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவைக் கண்டது. இதனால், தங்கம் விலை மிகவேகமாக உயந்து வருகிறது.

அதன்படி, செப்.8-ஆம் தேதி பவுன் ரூ.80,000-க்கும், செப்.22-ஆம் தேதி பவுன் ரூ.85,120-க்கும், அக்.1-ஆம் தேதி ரூ.87,120-க்கும் விற்பனையானது.

அதன்பின்னா் ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த தங்கம் விலை அக்.6-ஆம் தேதி பவுனுக்கு ரூ.1,400 உயா்ந்து ரூ.89,000-க்கும், அக்.7-ஆம் தேதி பவுனுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.89,600-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை, கிராமுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.11,300-க்கும், பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.90,400-க்கும் விற்பனையானது. வா்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு மாலை 2-ஆவது முறையாக தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ. 85 உயா்ந்து ரூ.11,385-க்கும், பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ. 91,080-க்கும் விற்பனையானது. இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.185, பவுனுக்கு ரூ.1,480 உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், தங்கம் விலை வியாழக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.120 உயா்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ.11,400-க்கும், பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.91,200-க்கும் விற்பனையாகிறது. எனினும், வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,67,000-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.171-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1000 உயா்ந்து ரூ.1.71 லட்சத்துக்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

2025 ஜனவரி முதல் தங்கம் கடந்து வந்த பாதை

தேதி பவுன் விலை (8 கிராம்)

1.1.2025 --------- ரூ.57,200

22.1.2025 --------- ரூ.60, 200

14.3.2025 ----------ரூ.65,000

12.4.2025 ---------- ரூ.70,160

1.9.2025 ----------- ரூ.77,640

6.9.2025 ------------ ரூ.80,040

22.9.2025 ---------- ரூ.85,120

8.10.2025 ----------- ரூ. 91,080

9.10.2025 ----------- ரூ. 91,200

Summary

Gold price approaching Rs. 92 thousand: Todays gold and Silver price situation...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com