மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு: மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான வினாடி-வினா போட்டிக்கு தேர்வு பெற்று சாதனை படைத்துள்ள மாணவிகளுக்கு பாராட்டு தொடர்பாக...
மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஆசிரியர்கள்.
மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஆசிரியர்கள்.
Published on
Updated on
1 min read

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட காந்திநகர் அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மாநில அளவிலான வினாடி-வினா போட்டிக்கு தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சேலம் மாவட்ட அளவில் பள்ளிகளில் நடைபெற்றுவரும் மன்றச் செயல்பாடுகளில் ஒன்றான வினாடி-வினா போட்டி நடைபெற்றது. அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் தம்மம்பட்டி பேரூராட்சி காந்திநகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் ஸ்ரீதிக் ஷா, நிவிதா ஆகியோர் சேலம் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.

மாணவிகளுக்கு பாராட்டு

தேர்வு பெற்ற மாணவிகளுக்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலர் அ. அலெக்ஸாண்டர், வட்டார மேற்பார்வையாளர்(பொ) ராணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளியின் தலைமையாசிரியர்(பொ) ராஜேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

Summary

Selection for state-level competition Praise for the students...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com