தமிழக மீனவர்கள் 30 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தின் ராமேசுவரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 30 பேரை வியாழக்கிழமை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 30 பேரை வியாழக்கிழமை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
Published on
Updated on
1 min read

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 30 பேரை வியாழக்கிழமை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் முடிவு கிட்டியதாய் இல்லை.

இந்த நிலையில், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீண்டும் தமிழக(ராமேசுவரம்) மீனவர்கள் 30 பேரை தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் நான்கு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தமிழக மீனவர்களை மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Summary

Sri Lankan Navy captures 30 Tamil Nadu fishermen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com