
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி மீது சொகுசு ஆம்னி வேன் மோதியதில், அவா் உயிரிழந்ததாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியில் வசித்து வருபவர் ஜாங்கீர் (52). இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் "மிச்சர் அப்பளம்" மற்றும் மசாலா போன்ற பொருட்களை அந்த பகுதிகளில் சில்லறை வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்து ஜாங்கிர் வியாபாரத்திற்காக பொருட்களை எடுத்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூருவில் இருந்து சென்னையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த சொகுசு டூரிஸ்ட் ஆம்னிவேன் ஆற்காடு அடுத்த வேப்பூர் அருகே ஜாங்கிரின் இருசக்கர வாகனத்தின் பின்புறமாக மோதியதோடு சாலையில் தரதரவென இழுத்து வீசியதில் கூலித் தொழிலாளி ஜாங்கிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு நகர போலீஸார் சாலையில் உயிரிழந்த ஜாங்கீர் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இந்த விபத்துக்குள்ளான வாகனத்தை பறிமுதல் செய்ததோடு விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில்லறை வியாபாரம் செய்யும் கூலித் தொழிலாளி சொகுசு டூரிஸ்ட் ஆம்னி வேன் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.