கல்பகனூரில் களை கட்டிய ஆட்டுச் சந்தை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆத்தூர் அருகே கல்பகனூர் கால்நடை சந்தையில் புதன்கிழமை ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.
களை கட்டிய கல்பகனூர் ஆட்டுச் சந்தை
களை கட்டிய கல்பகனூர் ஆட்டுச் சந்தை
Published on
Updated on
1 min read

சேலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆத்தூர் அருகே கல்பகனூர் கால்நடை சந்தையில் ஆடு, மாடு, கோழி, உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில் ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கல்பகனூரில் புதன்கிழமை வார சந்தை, தினசரி மார்கெட் மற்றும் கால்நடை சந்தை கடந்த நான்கு வாரத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. புதன்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

திங்கள்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம், மங்களபுரம், ராசிபுரம் கருமந்துறை, பேளூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம். மஞ்சினி, மல்லியகரை, தம்மம்பட்டி, தலைவாசல் அயோத்தியபட்டினம், கூட்டாத்துப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது கால் நடைகளான கொடி ஆடு, சீமை ஆடு, நாட்டு ஆடு, தலச்சோரி ஆடு, வேலி­ ஆடு, செம்மறி ஆடு, ஆந்திர ஆடு, போயர் ஆடு என பல்வேறு வகையிலான ஆடுகள் மற்றும் காங்கேயம் நாட்டு மாடு, சிந்து மாடு, கன்றுகள் மற்றும் கோழி உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

இதில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனை நடைபெற்றதில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை விற்பனை நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமாக ஆடுகள் விற்பனை நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Summary

A goat market built of weeds in Kalpaganur near Athur...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com