நெல் கொள்முதல் செய்யாமல் காலந்தாழ்த்தி வரும் திமுக அரசு: நயினார் கண்டனம்

நாகையில் பத்து நாள்களுக்கு மேலாக விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்யாமல் காலந்தாழ்த்தி வருதற்கு கண்டனம்
BJP
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நாகையில் பத்து நாள்களுக்கு மேலாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யாமல் காலந்தாழ்த்தி வருதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன், அரசு விவசாயிகள் நலனை காக்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

நாகையில் 10 நாள்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது.

மாவட்டம் முழுவதுமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 15,000 மூட்டைகள் வரை தேங்கி உள்ளதால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பது ஏற்படுடையதல்ல.

பருவ மழையையும் தீபாவளிப் பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஒரு அரசின் கடமை.

அதைவிடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

எனவே, "டெல்டாக்காரன்" என்று பெருமிதம் கொள்வது எள்ளளவாவது உண்மையென்றால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனைக் காத்திடுங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே! என்று கூறியுள்ளார்.

Summary

DMK government is delaying paddy procurement: Nainar Nagendran condemns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com