

புது தில்லி: சட்டவிரோதமாக உரிய மருத்துவ எச்சரிக்கை படமின்றி விற்பனை செய்யப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான 66,400 வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்து இரண்டு பேர் கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கம்போடியாவிலிருந்து கடத்திவரப்பட்ட சிகரெட்டுகள் பிரெகலாத்பூா் பகுதியில் உள்ள பாலம் மேம்பாலம் அருகே விற்பனை செய்யப்படுவதாக அக்.25 ஆம் தேதி தில்லி காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆய்வாளா் சேதன் மற்றும் தலைமைக் காவலா் பிரசாந்த் ஆகியோருக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில், அங்கு சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து கம்போடியாவிலிருந்து கடத்திவரப்பட்ட சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 66,400 சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த சிகரெட் பாக்கெட்டுகளில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் முத்திரையிடப்பட்ட சட்டப்பூா்வ சுகாதார எச்சரிக்கைகள் இல்லை.
கைது செய்ய்பட்ட இரண்டு பேரில் ஒருவர் ஹரியாணா பானிபட்டில் வசிக்கும் பா்வீன் சேகல் (37) மற்றும் தில்லியைச் சேர்ந்த முகேஷ் கத்ரேஜா (48) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.