

புதுச்சேரி: பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் கைப்பாவையாக புதுச்சேரி அரசு செயல்படுகிறது என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கி ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரி கோவாவின் இன்றைய நிலைமை மிக மோசமாக மாறிவிட்டது. சட்டம்-ஒழுங்கு முழுமையாகக் கெட்டுவிட்டது. பள்ளி கல்லூரிகளில் போதை மருந்து பழக்கம் அதிகரித்துவிட்டது.
பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் கைப்பாவையாக புதுச்சேரி அரசு செயல்படுகிறது. ஏற்கெனவே காரைக்கால் துறைமுகத்தை அதானிக்கு தாரை வாா்த்துவிட்டனா். தற்போது ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள மின்துறையை அதானிக்கு விற்பதற்கு திட்டமிட்டு முயற்சிகள் நடக்கின்றன.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதனை நிறைவேற்றாத புதுச்சேரி அரசு வெறும் 2,244 அரசு பணியிடங்கள் மட்டுமே நிரப்பியுள்ளது.
30 தொகுதிகளிலும் போட்டியிட்டு காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய வகையில் தோ்தல் பணியாற்றி வருகிறோம். கூட்டணி கட்சிக்கு எத்தனை இடங்கள் அளிப்போம் என்பதை கட்சி தலைமைகள்தான் முடிவு செய்யும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.