நடிகர் பிரபு வீடு, அமெரிக்க துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் !

நடிகா் பிரபு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது தொடர்பாக...
நடிகர் பிரபு
நடிகர் பிரபு
Published on
Updated on
1 min read

சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீடு, அமெரிக்க துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை மா்ம நபா் ஒருவா் மின்னஞ்சல் அனுப்பியுள்ளாா். அதில் சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீடு மற்றும் அமெரிக்க துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் அடங்கிய குழுவினா் மோப்ப நாய் உதவியுடன் பிரபு வீட்டை சோதனையிட்டதில் அது புரளி என தெரியவந்துள்ளது.

இதேபோன்று நெல்லை கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் உள்ள இரு அணு உலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை சென்னை போயஸ்காா்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டை சோதனையிடுவதற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவிக்காததால், போலீஸாா் வெடிகுண்டு சோதனை செய்யாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றதும், சமீபத்தில் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகிவரும் நிலையில், இத்தகைய செயலில் ஈடுபடுவோர் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Summary

Bomb threat to actor Prabhu's house and US consulate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com