

சென்னை: பணம் கொடுத்தால்தான் அரசு வேலை அளவுக்கு இளைஞரின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது என குற்றம்சாட்டியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார், தமிழ்நாட்டில் ஊழல் புரையோடி பொய் உள்ளது; திமுக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி போல பலர் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
முத்துராமலிங்கத் தேவரின் 118 ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஜெயகுமார்,
கூட்டணி குறித்து கடந்த மாதம் என்ன நிலைபாடோ அதே நிலைப்பாடுதான் தற்போதும் என்று தவெக அருண்ராஜ் கூறியது குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒறு நிலைப்பாடும் இருக்கும். அவர்களின் நிலைப்பாடு அது. இதை அவர்களின்தான் கேட்க வேண்டும்.
நாட்டில் ஊழல் புரையோடி போய் உள்ளது. செந்தில் பாலாஜி போல ஸ்டாலின் அமைச்சரவையில் பலர் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால்தான் அரசு வேலை என்ற அளவுக்கு இளைஞரின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது
உள்நோக்கத்துடன் செயல்படுவதாக கே. என். நேரு விளக்கம் குறித்த கேள்விக்கு, மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை.
தவெக தலைவர் விஜய், கரூர் பிரசாரக் கூட்டத்தில் இறந்தவர்களின் வீட்டுக்கு செல்லாமல் அவர்களை சென்னைக்கு அழைத்து துக்கம் விசாரித்தது குறித்த கேள்விக்கு... அதை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.