தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல் மட்டுமே தவிர, புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என விளக்கம் அளித்துள்ளது சுகாதாரத் துறை, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது:
காலநிலை மாற்றம், மழை பாதிப்பு போன்ற காரணங்களால் கடந்த இரண்டு வாரங்களாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சளி, இருமல், தலைவலி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளோடு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி காய்ச்சலின் தன்மையை கண்டறியுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெற்றப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவில் புதிய வகை வைரஸ் தொற்று காணப்பட்டால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் அறிகுறி தெரியவந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 சதவீத நோயாளிகளுக்கு இன்புளுன்சா ஏ வகை பாதிப்பு மட்டுமே உள்ளது. புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை.
ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். இதற்கு வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
திருமணம்,கோயில் நிகழ்ச்சிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு சுகாதாத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளூவன்சா ஏ வகை தொற்று என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வேறு எதுவும் தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிக்க, தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் ஆகியவற்றில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை எடுக்கிறது சுகாதாரத்துறை.
38 மாவட்டங்களில் 10 முதல் 20 மாதிரிகள் என 450-க்கும் மேற்பட்ட மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய உள்ளதாகக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
There is no new type of virus infection except for the influenza A virus type that is spreading in various parts of Tamil Nadu including Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.