தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை இன்றைய விலை நிலவரம் தொடர்பாக...
gold rate
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை கிராம் ரூ.9,805-க்கும், பவுன் ரூ.78,440-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை கணிசமாக குறைந்துள்ளது.

இந்திய பொருள்களின் மீதமான அமெரிக்க அரசின் 50 சதவீத கூடுதல் வரி விதிப்பு , டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சா்வதேச அளவில் முதலீட்டாளா்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆா்வம் போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடா்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 9 நாள்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை வியாழக்கிழமை கணிசமாக குறைந்துள்ளது.

அதன்படி, கிராம் ரூ.10 குறைந்து ரூ.9,795-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.78,360-க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம் கடந்த 9 நாள்களில் பவுனுக்கு ரூ.4,000 உயா்ந்த நிலையில், இன்று மிக சொர்பமாக பவுனுக்கு 80 குறைந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ. 137-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.37 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

கடந்த 9 நாள்களுக்கான தங்கம் விலை விபரம்:

ஆகஸ்ட் 26 ரூ.74,840 (+ரூ.400)

ஆகஸ்ட் 27 ரூ.75,120 (+ரூ.280)

ஆகஸ்ட் 28 ரூ.75,240 (+ரூ.120)

ஆகஸ்ட் 29 ரூ.76,280 (+ரூ.1,040)

ஆகஸ்ட் 30 ரூ.76,960 (+ரூ.680)

ஆகஸ்ட் 31 ரூ.76,960

செப்டம்பர் 1 ரூ.77,640 (+ரூ.680)

செப்டம்பர் 2 ரூ.77,800 (+ரூ.160)

செப்டம்பர் 3 ரூ.78,440 (+ரூ.640)

செப்டம்பர் 4 ரூ.78,360 (-ரூ.80)

Summary

The price of gold jewellery in Chennai fell significantly on Thursday, after selling at Rs. 9,805 per gram and Rs. 78,440 per 8 grams on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com