
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை பவுன் ரூ.78,920-க்கு விற்பனையாகி வருகிறது.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச சந்தையில் முதலீட்டாளா்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆா்வம் காட்டிவருகின்றனா். இதனால், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.
கடந்த ஆக. 29-ஆம் தேதி முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வரலாறு காணாத புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.
கடந்த 9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,000 உயா்ந்து, புதன்கிழமை பவுன் ரூ.78,440-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,795-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.78,360-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9,865-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.78,920-க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை தொடா்ந்து 3-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.37 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
கடந்த 10 நாள்களுக்கான தங்கம் விலை விவரம்:
ஆகஸ்ட் 26 ரூ.74,840 (+ரூ.400)
ஆகஸ்ட் 27 ரூ.75,120 (+ரூ.280)
ஆகஸ்ட் 28 ரூ.75,240 (+ரூ.120)
ஆகஸ்ட் 29 ரூ.76,280 (+ரூ.1,040)
ஆகஸ்ட் 30 ரூ.76,960 (+ரூ.680)
செப்டம்பர் 1 ரூ.77,640 (+ரூ.680)
செப்டம்பர் 2 ரூ.77,800 (+ரூ.160).
செப்டம்பர் 3 ரூ.78,440 (+ரூ.640).
செப்டம்பர் 4 ரூ.78,360 (-ரூ.80)
செப்டம்பர் 5 ரூ.78,920 (-ரூ.560)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.