
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக முதல்வர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
லண்டன் கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழக இந்திய வம்சாவளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுடன் நமது திராவிட மாடல் ஆட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் ஆற்றல் ஆகியவை குறித்த எனது கருத்துகளைப் பகிர்ந்து, மனதுக்கு நெருக்கமான உரையாடலை மேற்கொண்டேன்.
பின்னர், அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி, எக்காலத்துக்குமான தமிழ்ப் பண்பாட்டின் அறிவுக்கருவூலமாகத் திகழும் திருக்குறளைப் போற்றினேன்.
இறுதியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகளையொட்டி, அதன் மக்களாட்சி மரபினையும் தற்காலப் பொருத்தப்பாடினையும் குறித்து நடைபெறும் PACT கண்காட்சியைப் பார்வையிட்டேன் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.