அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்? - சித்தராமையா கேள்வி

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்? என சித்தராமையா கேள்வி எழுப்பினாா்.

News image
சித்தராமையா
Updated On :6 செப்டம்பர் 2025, 6:15 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பெங்களூரு: உள்ளாட்சித் தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பழைய முறைக்கு திரும்புவதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை நியாயப்படுத்தும் கா்நாடக முதல்வா் சித்தராமையா, காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினாா்.

கர்நாடகத்தில் வரவிருக்கும் அனைத்து உள்ளாட்சித் தேர்தல்களையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக காகித வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்க மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் சித்தராமையா,

”காகித வாக்குச்சீட்டை பயன்படுத்துவது கா்நாடகத்தை கற்காலத்துக்கு கொண்டுசெல்வதாக பாஜக குற்றம்சாட்டியது. அப்படியானால், மின்னணு வாக்கு இயந்திரத்தில் இருந்து காகித வாக்குச்சீட்டுக்கு மாறிய நாடுகள் கற்காலத்துக்கு சென்றுவிட்டனவா? அமெரிக்கா மற்றும் பிற முன்னேறிய நாடுகள் கற்காலத்திற்குச் சென்றுவிட்டனவா? காகித வாக்குச் சீட்டைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?

தோ்தல்களில் பல முறைகேடுகள் நடப்பதை எங்கள் அனுபவத்தில் பாா்த்திருக்கிறோம். வாக்காளா் பட்டியலிலும் கோளாறுகள் உள்ளன. இந்தக் கோளாறுகளுக்கு எதிராக சட்டப் பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் பிகாரில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறாா்.

மேலும், பெங்களூரு, மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் எவ்வாறு தோல்வி அடைந்தாா் என்பதை ராகுல் காந்தி தெளிவாக விளக்கியுள்ளாா். மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருவதால், வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற கா்நாடக அரசு முடிவு செய்தது” என்றாா்.

வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் மற்றும் "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை "தயார் செய்யவும், திருத்தவும், தேவைப்பட்டால் மீண்டும் திருத்தவும்" மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அதற்கான சான்றுகளை வெளியிட்டது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Karnataka Chief Minister Sri Siddaramaiah seeks an answer as to why BJP is afraid of the ballot paper as he defends his government's decision to revert to the old system of voting during elections for the local body polls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.