லிடியன் நாதஸ்வரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on
Updated on
1 min read

திருக்குறளை உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்துள்ள இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

பதின்பருவம் கடக்கின்ற இளம் வயதிலேயே, உலகப் பொதுமறையான திருக்குறளைக் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்துள்ள உடன்பிறப்புகள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்!

இசையில் தோய்ந்து பல திறமைமிக்க குரல்களில் ஒலித்திடும் குறளமுதத்தினை அனைவரும் கேட்டிட வேண்டும்! குறளிசைக்காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும்! என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

To experience the songs in their true mastered sound, please turn OFF volume normalisation in your Spotify settings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com