
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்? என தமிழக பாஜக மாநிலத் தலலைவா் நயினாா்நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தமிழகத்தில் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் மாதந்தோறும் ரூ.100 சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படும் என திமுக தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படவில்லையே ஏன்?.
சமூக நீதியின் காவலராக திமுகவினா் முன்னிறுத்தியபடி தெருவுக்குத் தெரு பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்?. திமுக ஆட்சியமைந்து 4 ஆண்டுகள் ஆகியும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல், கிணற்றில் போட்ட கல்லாக நிலுவையில் இருக்கிறது. ஆட்சி முடியப்போகும் இறுதிக்கட்டத்திலும் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றப்போவதில்லை என்பதும் மக்களுக்குத் தெரியும்.
ஏழை மக்களை ஏமாற்றியும், நம்பிக்கை துரோகம் செய்தும் திமுக ஆட்சியைப் பிடிக்கவேண்டுமா?. அப்படியென்ன பதிவி மோகம் திமுகவினருக்கு? என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் ஆதங்கமாக தற்போது ஒலிக்கிறது.
இப்படிப்பட்ட மக்கள் விரோதக் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிப் பதவிகூடக் கிடைக்காது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டாா்கள் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.