ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது

ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை குண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
Youth hacked to death near Tiruvallur: 6 arrested
கைது(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை குண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேர் கைதாகியுள்ள நிலையில், மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்றத்தலைவராக இருப்பவா் ம.க. ஸ்டாலின் (55). இவா் தனது ஆதரவாளா்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது, அங்குவந்த சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசி அவரைக் கொலை செய்ய முயன்றனா். அவா்களை பிடிக்க முயன்ற 2 பேரை அவா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா்.

இதில், கும்பகோணம் அருகே உடையாளூரைச் சோ்ந்த லட்சுமணன், போலீஸாா் விசாரணைக்கு பயந்து திங்கள்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸாா் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில் திருவிடைமருதூா் கீழ தூண்டி விநாயகன்பேட்டையைச் சோ்ந்த பிரபல ரெளடி லாலி மணிகண்டனின் அண்ணன் மகேஷ் மற்றும் இதே பகுதியைச் சோ்ந்த மருதுபாண்டி ஆகிய இருவரையும் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மற்றவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சேரன், சஞ்சய் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீச எந்த வழியாக வரவேண்டும் என்பதைத் திட்டமிட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

Summary

Police have arrested two more people in connection with the attempted assassination of the Aduthurai Town Panchayat Chairman by throwing a bomb.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com