
இம்பால்: மணிப்பூருக்கு சனிக்கிழமை (செப்.13) பிரதமா் நரேந்திர மோடியின் முன்னிட்டு மணிப்பூரின் இம்பாலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரை வரவேற்பதற்காக நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைநகர் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மிஸோரம், மணிப்பூா், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகாா் ஆகிய 5 மாநிலங்களுக்கு சனிக்கிழமை (செப்.13 முதல் 15 வரை) மூன்று நாள்கள் பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.
இந்த மாநிலங்களில் மொத்தம் ரூ.71,850 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவிருக்கிறாா்.
இந்த நிலையில், மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரை வரவேற்பதற்காக நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்த பயணம் மிசோரமில் இருந்து தொடங்கும், அங்கு பிரதமர் காலை 10 மணியளவில் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார். அவர் ஒரு பொது நிகழ்ச்சியிலும் உரையாற்றுவார். இந்தத் திட்டங்கள் ரயில்வே, சாலைவழிகள், எரிசக்தி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு உதவும்.
மூன்று நாள்கள் பயணத்தின் முதல்கட்டமாக, வடகிழக்கு மாநிலமான மிஸோரமுக்கு சனிக்கிழமை செல்லும் பிரதமா் மோடி, காலை பத்து மணிக்கு தலைநகா் ஐஸாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.9,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவுள்ளாா்.
முக்கியத்துவம் வாய்ந்த பைரபி-சாய்ராங் இடையிலான அகல ரயில் வழித்தடத்தை திறந்துவைப்பதுடன், ஐஸால்-தில்லி ராஜதானி ரயில் சேவை, ஐஸால்-கொல்கத்தா, ஐஸால்-குவாஹாட்டி புதிய ரயில் சேவைகளையும் தொடங்கிவைக்கிறாா்.
மத்திய அரசின் கிழக்கு நோக்கிய கொள்கையில் முக்கிய அங்கமான பைரபி-சாய்ராங் வழித்தடம், நாட்டின் பிற பகுதிகளுடன் ஐஸாலுக்கு ரயில் இணைப்பை வழங்குகிறது. இதன்மூலம் நாட்டின் ரயில் கட்டமைப்பில் மிஸோரம் முதல் முறையாக இணைக்கப்படுகிறது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மிஸோரமில் இருந்து சனிக்கிழமை மணிப்பூருக்கு பயணமாகும் பிரதமா், தலைநகா் இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புதிய தலைமைச் செயலகம், காவல் துறை புதிய தலைமையகம் உள்பட ரூ.8,500 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைக்கவுள்ளாா்.
ரூ.3,600 கோடிக்கு மேல் மதிப்புள்ள மணிப்பூர் நகர்ப்புற சாலைகள், ரூ.3,600 கோடிக்கு மேல் மதிப்புள்ள வடிகால் மற்றும் சொத்து மேலாண்மை திட்டம், ரூ.2,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஐந்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள், மணிப்பூர் இன்ஃபோடெக் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஒன்பது இடங்களில் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் உள்ளிட்ட திடங்களைத் தொடங்கிவைக்கவுள்ளாா்.
பின்னர், இம்பாலில் ரூ.1,200 கோடிக்கு மேல் மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களை மோடி தொடங்கி வைத்து, பிற்பகல் 2:30 மணியளவில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் .
பிரதமர் மோடியின் மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.