ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்குமார் சாதனை!
படம் | ஆனந்த் குமார் பதிவு

ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்குமார் சாதனை!

ஸ்கேட்டிங் 500 மீட்டர் டி ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார்
Published on

ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய இளம் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஆனந்த்குமார் வேல்குமார் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

500 மீட்டர் டி ஸ்பிரிண்ட் போட்டியில் அவர் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஸ்பீடி ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனியர் பிரிவில் இந்தியா முதல்முறையாக பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ள நிகழ்வானது ஆனந்த்குமாரின் சாதனையால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இப்பிரிவில் இந்தியாவிலிருந்து ஒருவர் பெறும் முதல் பதக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களுக்கு முன், சீனாவில் செங்டுவில் நடைபெற்ற உலக விளையாட்டு போட்டியின் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட்டிலும் அவர் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

India’s Anandkumar Velkumar Wins Country’s First-Ever Senior Medal At Speed Skating World Championships

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com