மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி: நிதிஷ் குமார் அறிவிப்பு

பிகாரில் பேரவைத் தேர்​தலுக்கு முன்​ன​தாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன்​கள் அனைத்​துக்​கும் வட்டி தள்​ளு​படி செய்​யப்​படும் ...
pension hike move as good news
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பிடிஐ
Published on
Updated on
2 min read

பிகாரில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரவிருக்​கும் சட்டப்பேரவைத் தேர்​தலுக்கு முன்​ன​தாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கும் மாணவர் கடன் அட்டை திட்​டத்​தின் கீழ் வழங்கப்படும் கல்விக் கடன்​கள் அனைத்​துக்​கும் வட்டி தள்​ளு​படி செய்​யப்​படும் என அம்​மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறி​வித்​துள்​ளார். தேர்தலுக்கு முன்னதாக வரும் இந்த நடவடிக்கை ஏராளமான மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் கூறி​யிருப்​ப​தாவது:

இப்​போது அனைத்து விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கும் மாணவர் கடன் அட்டை திட்​டத்​தின் கீழ் வழங்கப்படும் கல்விக் கடன்கள் முற்றிலும் வட்டி இல்​லாத​தாக இருக்​கும் என்​பதை உங்​களுக்கு தெரி​விப்​ப​தில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அதேபோன்று மாணவர்​கள் கல்விக் கடனை திருப்​பிச் செலுத்​து​வதற்​கான கால​மும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, ரூ.2 லட்​சம் வரையிலான கல்வி கடன்களுக்கான திருப்பிச் செலுத்​துவதற்​கான காலத்தை ஐந்து ஆண்​டு​களில்(60 மாதத் தவணைகள்) ஏழு ஆண்டுகளாக (84 மாதத் தவணைகள்) நீட்​டிக்​கப்​படும்.

அதே நேரத்தில், ரூ.2 லட்​சத்​துக்​கும் மேலான கடன்களை திருப்​பிச் செலுத்​து​வதற்​கான காலத்தை ஏழு ஆண்​டு​களி​ல்(84 மாதத் தவணைகள்) இருந்து பத்து ஆண்டுகளில்(120 மாதத் தவணைகள்) திருப்பிச் செலுத்த வேண்டும்.

2016 முதல் பிகாரில் ஏழு நிச்சய திட்டத்தின் கீழ், பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு மாணவர் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் உயர்​கல்வி பயில ரூ.4 லட்​சம் வரை கல்விக் கடன்​கள் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தற்​போது, பொது விண்​ணப்​ப​தாரர்​களுக்கு 4 சதவீத வட்​டி விகிதத்திலும், பெண்​கள்​, ​மாற்றுத்​திற​னாளி​கள்​ மற்​றும்​ திருநங்​கை விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கு வெறும்​ 1 சதவீத வட்​டி விகிதத்திலும் கடன் வழங்கப்பட்டது. இருப்பினும், இப்போது இது முற்றிலும் வட்டியில்லாக கடனாக வழங்கப்படும்.

மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்க நடவடிக்கை

மேலும், மாநிலத்தில் அதி​க​மான மாணவர்​கள் உயர்​கல்வி பெறு​வதை உறுதி செய்​வதே அரசின் நோக்​க​மாக உள்​ளது.

உயர்​கல்விக்​கான கல்விக் கடன்களில் வழங்​கப்​படும் இந்த மேம்படுத்தப்பட்ட சலுகைகள் மாணவர்​களின் மன உறு​தியை அதி​கரிக்​கும் மற்றும் அவர்​கள் அதிக உற்​சாகத்​துட​னும் அர்ப்​பணிப்​புட​னும் உயர்​கல்​வியைத் தொடர ஊக்குவிக்கும்.

இதன் மூலம் அவர்​களின் சொந்த எதிர்​காலத்தை மட்​டுமல்ல, மாநிலம் மற்​றும் நாட்​டின் எதிர்​காலத்​தை​யும் வடிவ​மைக்கும் என்று நிதிஷ் குமார் கூறினார்.

சமீபத்தில் மாநிலத்தில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் அனைத்து அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் முதற்கட்ட தேர்வுளுக்கான கட்டணம் ரூ.100 ஆகவும், முதன்மைத் தேர்வுகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் நிதிஷ் குமார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Kumar further said that the government aims to ensure that the maximum number of students in the state are able to pursue higher education.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com