மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடிவடையும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

News image

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த்.

Updated On :17 செப்டம்பர் 2025, 6:52 am

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை: ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடிவடையும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்-2 பெங்கல் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெயிலர் - 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடிவடையும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நான் ஜெய்லர்- 2 படப்பிடிப்புக்காக கேரளம் செல்வதற்காக புதன்கிழமை கோவை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

கோவை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்துடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட அவிநாசிலிங்கம் கல்லூரி மாணவிகள்

கோவை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்துடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட அவிநாசிலிங்கம் கல்லூரி மாணவிகள்

நான் ஜெய்லர்- 2 படப்பிடிப்புக்காக கேரளம் மாநிலம் பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாள்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்கிறேன். படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று ரஜினிகாந்த் கூறினார்.

அப்போது நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா ? என்று செய்தியாளர்களின் கேளிவிக்கு, நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு ரஜினிகாந்த் புறப்பட்டுவிட்டார்.

யாத்ரி சேவா திவாஸ் நாளையொட்டி கோவை விமான நிலையத்தில் அவிநாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் படுகர் நடனமாடி பயணிகளை வரவேற்றனர். அப்போது, சென்னையிலிருந்து வந்த நடிகர் ரஜினிகாந்த் உடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Actor Rajinikanth announced at the Coimbatore airport on Wednesday that the shooting of the movie Jailer - 2 will be completed in July.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.