எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா காலமானார்!

எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா மறைந்தார்...
writer S. L. Bhyrappa
எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா
Published on
Updated on
1 min read

பிரபல எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா உடல் நலக்குறைவால் காலமானார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளரான எஸ். எல். பைரப்பா இந்தியளவில் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார். இவர் எழுதிய பருவம், ஒரு குடும்பம் சிதைகிறது, வம்ச விருட்சம் நாவல்கள் இந்திய இலக்கியத்தில் பாய்ச்சலாகவே கருதப்படுகின்றன.

இவை அனைத்தும் கன்னடத்திலிருந்து பிறமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பரவலவான கவனத்தைப் பெற்றவை.

பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ மற்றும் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது உள்பட பல விருதுகளை வென்ற பைரப்பாவின் படைப்புலகம் தத்துவம், வரலாறு, சமூக அரசியல், மத சிந்தனை ஆகியவற்றை மையமாகக் கொண்டவை என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழ் இலக்கியச் சூழலிலும் இவர் எழுதிய ஒரு குடும்பம் சிதைகிறது முக்கியமான ஆக்கமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 94 வயதான எஸ். எல். பைரப்பா வயது மூப்பால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு கன்னட எழுத்தாளர்கள், வாசகர்கள் உள்பட பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

sahitya akademy winner writer S. L. Bhyrappa died today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com