தனியார் காப்பகத்தில் குழந்தையை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

கோவை அருகே தனியார் காப்பகத்தில் குழந்தையை கெடூரமாக தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார்
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார்
Published on
Updated on
1 min read

கோவை : கோவை அருகே தனியார் காப்பகத்தில் குழந்தையை கெடூரமாக தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

கோவையில் உயிர் அமைப்பின் சார்பில் அவிநாசி சாலை அண்ணா சிலை பகுதியில் இருந்து விமான நிலையம் வரை சாலை பாதுகாப்பு குறித்து மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள், என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஆட்சியர் பவன்குமார், கோவை சர்க்கார் சாமகுளம் பகுதியில் தனியார் காப்பகத்தில் குழந்தையை ஒருவர் கொடூரமாக தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறித்த கேள்விக்கு, காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பூ மார்க்கெட் விடியோ விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் புகார்களை பெற்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். யு-டர்ன் சம்பந்தமாக மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். சொகுசு கார்களுக்கு அபராதம் விதிக்காமல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அபராதம் விதித்து வருவது தொடர்பாக காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார்.

Summary

Action will be taken against the person who attacked the child in a private nursery says Collector

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com