கரூர் நெரிசல் பலிகளைத் தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 39 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
பலியானர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் கரூரில் பெரும் சோகமே ஏற்பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
தற்போது, கரூர் காவல்துறை சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், இணைச்செயலர் சி. டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் மதியழகன் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் பிரச்னையின் தீவிரத்தால் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: இனி விஜய்யின் பேச்சு தொடருமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.