10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 3- ஆவது நாளாக வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா்.
அதன்படி, தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு குறைந்தபட்ட ஓய்வூதியம் மாதம் ரூ.6,750 வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்கவேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ. 16,500, அலுவலக உதவியாளர் நிலையில் ரூ. 15,700 என்ற அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு, பெண் சத்துணவு ஊழியா்களுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 3 ஆவது நாளாக வியாழக்கிழமை திரண்ட 500-க்கும் மேற்பட்ட சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், மீண்டும் தேர்தல் அறிக்கை கொடுத்தால் திமுக அரசை நம்பமாட்டோம் என்று சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டரை போலீஸாா் கைது செய்தனா்.
Summary
Anganwadi, nutritious meal scheme workers stage protest for the 3rd day
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பினா் போராட்டம்: 360 போ் கைது

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 8-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் தா்னா

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 3-ஆவது நாளாக மறியல்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


