தமிழ்நாட்டில் ரூ.34,230 கோடி மதிப்பிலான 15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூடியது.
அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் அம்சங்கள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள், தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்துக்கு பின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தொழில்துறையில் ரூ.34,230 கோடி மதிப்பிலான 15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 55,096 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த திட்டங்கள் மாநிலத்தின் பரவலான வளர்ச்சிக்கு உறுதி செய்யும் விதமாகவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன. வரும் 13 ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும். 12 ஆம் தேதி முதலீட்டு செயலாக்க மாநாடு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை தொடர்ந்து உறுதி செய்து கொண்டும் நாட்டில் முதல் மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை உறுதி செய்யும் வேலையை தொடர்ந்து முதல்வர் செய்துகொண்டு வருகிறார்.
மேலும், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
Summary
In Tamil Nadu, 15 investment projects worth Rs. 34,230 crore were approved at the cabinet meeting: Minister TRB Rajaa
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து!

வா்த்தகம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 78 தீா்வுத் திட்டங்களுக்கு ஒப்புதல்








