உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

தலைவாசல் அருகே பள்ளி மாணவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை: அதிர்ச்சியடைந்த பெற்றோர்!

தலைவாசல் அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது தொடர்பாக...

கோப்புப்படம்

Published On :6 பிப்ரவரி 2026, 2:49 pm IST

சேலம்: தலைவாசல் அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், வீரகனூர் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், திடீரென அந்த மாணவி வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது மாணிவியை மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மாணவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், 24 வயது இளைஞர் ஒருவரோடு மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், இதில் மாணவி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவியை கர்ப்பம் அடைய செய்த அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆத்தூர் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

A schoolgirl gives birth to a baby girl... Parents shocked

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.