அதனால்தான், உங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவதற்கான, தகுந்த பரிந்துரைகளை வழங்க, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்கள் தலைமையில், ஒரு குழுவை அமைத்தோம். அவர்களும் அறிக்கை அளித்தார்கள். தொடர்ந்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உங்களிடம் உட்கார்ந்து தொடர்ந்து பேசினார்கள். உங்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், தமிழ்நாட்டின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்தவித தடைகளும் இல்லாமல் முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு என்று எல்லாவற்றையும் பரீசிலனை செய்துதான், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” அறிவித்தோம்!